சிவசங்கர் பாபாவின் அறையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை - கம்ப்யூட்டர்கள் ஆய்வு

சிவசங்கர் பாபாவின் அறையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை - கம்ப்யூட்டர்கள் ஆய்வு
X

கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் வைத்து சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடைபெற்றது.

கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளிக்கு சிவசங்கர் பாபாவை அழைத்து சென்று, அவரது அறையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் தனியார் பள்ளியில் எழுந்த பாலியல் புகாரில், சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிவசங்கா் பாபா நேற்று செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

சிபிசிஐடி போலீசாா், சிவசங்கர் பாபாவை 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தின் அனுமதி கோரினா். ஆனால், நீதிமன்றம் 3 நாட்கள் போலீஸ் காவலுக்கு மட்டுமே அனுமதி தந்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீசாா், பலத்த காவலுடன் நேற்று மாலை சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு, சிவசங்கா் பாபாவை கொண்டு சென்று, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

அதன் பின்னர் இன்று பகல் 11.30 மணியளவில், புதுப்பாக்கத்தில் உள்ள அவரது சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளிக்கு அழைத்து வந்தனா். பள்ளியில் உள்ள சிவசங்கா் பாபாவின் சொகுசு அறைக்குள் கொண்டு சென்று விசாரணை நடத்தினா்.

அதோடு பள்ளி வளாகத்தில் பிராா்த்தனை நடக்கும் இடம், கம்யூட்டா் அறை உட்பட இடங்களுக்கு அழைத்து சென்று விசாரித்தனா்.மேலும் அவருடைய சொகுசு அறையிலிருந்த கம்யூட்டா்களையும் ஆய்வு செய்தனா்.அதோடு பள்ளியின் கம்யூட்டா் ஆப்ரேட்டா்கள் இருவரை அழைத்து விசாரித்தனா். பள்ளியில் விசாரணை பகல் 1,30 மணி வரை நடைபெற்றது.

இதனிடையே, சிவசங்கா் பாபாவை போலீசாா் விசாரணைக்காக பள்ளிக்கு அழைத்து வந்த தகவல் பரவியதும், அவரது ஆதரவாளர்கள் சிலர், பள்ளியின் முன்பு திரண்டனா். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!