கல்பாக்கம் அருகே வீட்டுமனை வழங்கக்கோரி திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகம் முற்றுகை

கல்பாக்கம் அருகே வீட்டுமனை வழங்கக்கோரி திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகம் முற்றுகை
X

திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய பொதுமக்கள்.

கல்பாக்கம் அருகே 66 குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டுமனை வழங்கக்கோரி, திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த நல்லாத்தூர் பகுதியில் 66 குடும்பங்கள் அரசுக்கு சொந்தமான நீர்நிலை பாதையில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வந்தனர்.

கடந்த மழை வெள்ள காலத்தில் நீர் செல்ல வழியில்லாததால் வீடுகளை அரசு அதிகாரிகள் இடித்தனர் அதற்கு பதிலாக வேறு ஒரு மாற்று இடத்தை வழங்கினர்.

ஆனால் அப்பகுதியில் வசிக்கும் ஒரு சமூகத்தினர் அவர்களின் சமூக மக்களான 45 குடும்பங்களை மட்டும் அனுமதித்து மீதமுள்ள மாற்று சமுதாய தாழ்த்தப்பட்ட மக்களான 21 குடும்பங்களை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருக்கழுகுன்றம் வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் திருக்கழுக்குன்றம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் சிவசங்கர் ஒரு வார காலத்திற்குள் உங்களுக்கு வீட்டுமனை வழங்குவதாக உறுதியளித்தார் இதனையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story
future of ai act