பாலியல் புகார்: கேளம்பாக்கம் தனியார் பள்ளி நிர்வாகி மீது போக்சோ சட்டம் பாய்ந்தது!

பாலியல் புகார்: கேளம்பாக்கம் தனியார் பள்ளி நிர்வாகி மீது போக்சோ சட்டம் பாய்ந்தது!
X

பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, செங்கல்பட்ட மாவட்டம் கேளம்பாக்கம் தனியார் பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது. இப்பள்ளியை சிவசங்கர் பாபா என்பவர் நடத்தி வருகிறார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் சாமியார் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவிகளின் மூன்று தனித்தனி புகார்களின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை அடுத்து அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி அமைந்துள்ள செங்கல்பட்டு கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே குழந்தைகள் உரிமைகள் ஆணையம், இந்த புகார் குறித்து விசாரணை செய்துள்ளது. இந்த விசாரணைக்கு சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை. போக்சோ சட்டம் பாய்ந்துள்ள நிலையில், டேராடூனில் உள்ள மருத்துவமனையில் நெஞ்சுவலி காரமணாக சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்