கடத்திவரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்...

கடத்திவரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்...
X
மதுபாட்டில்கள் பறிமுதல்

திருப்போரூர் பகுதியில் ஊரடங்கு காலத்தில் விற்பனைக்காக மதுபாட்டில்களை எடுத்து சென்றவர்களை காவல்துறையினர் கைது செய்து சுமார்் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 502 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து்ள்ளனர்,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆலத்தூர், இல்லலூர், போன்ற பகுதிகளில் ஆய்வாளர் கலைச்செல்வி தலைமையில் மற்றும் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் ஏராளமான மது பாட்டில்கள் இருப்பதை கண்டறிந்தனர்,

திங்கட்கிழமை முதல் மதுபான கடைகள் மூடப்படும் நிலையில் கள்ளச் சந்தையில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 502 மதுபாட்டில்கள் பறிமுதல், 14 பேர் மீது திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.,

Next Story
அடுத்த சில ஆண்டுகளில் AI மூலம் வந்துவரும் அற்புத மாற்றங்கள்!