இரண்டாம் தவணை நிவாரண நிதியுதவி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவங்கி வைத்தார்
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான அரசு, பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளிலேயே தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதில் முதல் தவணையாக 2,000 ரூபாய் மே மாதத்திலேயே வழங்கப்படுமென அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக 2,000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இரண்டாம் தவணை நிதியுதவி வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, கொரோனா நிவாரண நிதியுதவியின் இரண்டாவது தவணையாக ரூபாய் 2,000 வழங்கும் திட்டம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் திருக்கழுக்குன்றம் பகுதியில் ஊரக தொழில்துறை அமைச்சர் அமைச்சர் தா.மோ அன்பரசன் துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், எம்.எல்.ஏக்கள் எஸ்.எஸ் பாலாஜி, வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu