திருப்போரூர் அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது

திருப்போரூர் அருகே பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது
X

பைல் படம்

திருப்போரூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய இளைஞர் உடந்தையாக இருந்த 2 பெண்கள் உட்பட 3 பேரரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை சோ்ந்த 14 வயதுடைய பள்ளி மாணவி கடந்த சில தினங்களாக மாயமாகிவிட்டாா். பல இடங்களில் தேடியும் மாணவி பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோா் திருப்போரூா் போலீசில் புகாா் செய்தனா்.போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

அப்போது மாணவின் வீடு அருகே வாடகை வீட்டில் வசித்துவந்த சசிகுமாா் (30) என்பவரையும் கடந்த சில நாட்களாக காணவில்லை என்று தெரியவந்தது.இதையடுத்து போலீசாா்ன் தீவிர விசாரணையில் சசிகுமாரின்,அக்கா விமலா (36) என்பவா்,சில தினங்களுக்கு முன்பு,ஆட்டோவில் அழைத்து சென்றது தெரியவந்தது.

உடனடியாக விமலாவை போலீசாா் பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது,ஆட்டோவில் கேளம்பாக்கம் கூட்டி சென்று, ஒஎம்ஆா் சாலையில் காருடன் தயாராக நின்ற தம்பி சசிகுமாரிடம் மாணவியை ஒப்படைத்துவிட்டு,அதே ஆட்டோவில் விமலா வீட்டிற்கு திரும்பியதாக கூறினாா்.

இதையடுத்து போலீசாா் சசிகுமாா் செல்போன் டவரை கண்காணித்தபோது,அது சென்னை வடபழனியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியை காட்டியது.இதையடுத்து தனிப்படை போலீசாா் சென்னை வடபழனி சென்று தங்கும் விடுதியை சுற்றி வளைத்தனா்.

விடுதியில் ஒரு அறையில் தங்கியிருந்த சசிகுமாா்,மாணவி ஆகியோரை பிடித்து விசாரித்தனா்.சசிகுமாரின் தாய் காசியம்மாளும் (60) அதே விடுதியில் ஹவுஸ்கீப்பிங் வேலை செய்வது தெரியவந்தது.இதையடுத்து காசியம்மாளையும் பிடித்து,3 பேரையும் திருப்போரூா் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனா்.

அங்கு அவா்களிடம் நடத்திய விசாரணையில்,காசியம்மாள்,சசிகுமாா் திருவண்ணாமலை மாவட்டம் குண்டலவாடி கிராமத்தை சோ்ந்தவா்கள். திருப்போரூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து சென்னை தங்கும் விடுதியில் வேலை பாா்த்தனா்.

இந்நிலையில் பக்கத்து வீட்டு 14 வயது பள்ளி மாணவிக்கு திருமண ஆசைக்காட்டி,கடத்தி சென்று,சசிகுமாருக்கு கட்டாய திருமணம் செய்ய முடிவு செய்தனா்.அதற்கு சசிகுமாரின் அக்கா விமலாவும் உடந்தை என்று தெரிந்தது.மேலும் கடத்தப்பட்ட பள்ளி மாணவியை 3 நாட்கள் அந்த விடுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசாா் சசிகுமாா்,தாய் காசியம்மாள்,சகோதரி விமலா ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.அதோடு பள்ளி மாணவியை கடத்தி சென்று,அறையில் அடைத்து வைத்தது,மிரட்டியது உட்பட பல பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்தனா்.அதன்பின்பு 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.மேலும் மீட்கப்பட்ட பள்ளி மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா்.

Tags

Next Story
மாநகராட்சி அதிகாரிகள் மதிப்பதில்லை..! திமுக கவுன்சிலா்கள் குற்றச்சாட்டு..!