கேளம்பாக்கத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணம் வழங்கிய சமூக ஆர்வலர்

கேளம்பாக்கத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணம் வழங்கிய சமூக ஆர்வலர்
X

கேளம்பாக்கத்தில் பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு திவ்யா வினோத் கண்ணன் கல்வி உபகரணங்களை வழங்கினார்.

கேளம்பாக்கத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரண பொருட்களை சமூக ஆர்வலர் திவ்யா வினோத்கண்ணன் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சியில் சமூக ஆர்வலரும் முன்னாள் வார்டு உறுப்பினருமான திவ்யா வினோத்கண்ணன் கேளம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

இதில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன் பெற்றனர். மேலும் அவர் கொரோனா தடுப்பு உபகரணங்களான மாஸ்க், சானிடைசர், சோப்பு ஆகிவற்றையும் வழங்கினார். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மாணவ, மாணவிகளை கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!