திருப்போரூர்: உண்டியலில் சேர்த்த பணத்தில் ஏழை மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய சிறுமி

திருப்போரூர்: உண்டியலில் சேர்த்த பணத்தில் ஏழை மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கிய சிறுமி
X

திருப்போரூர் அருகே சிறுமி சேமிப்பு பணத்தில் தனது பிறந்த நாளில் ஏழைகளுக்கு அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.

பதிமூன்று வயது சிறுமி பிறந்தநாளன்று உண்டியலில் சேர்த்துவைத்த பத்தாயிரம் ரூபாய் பணத்தில் தாழம்பூர் ஊராட்சி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாழம்பூர் ஊராட்சியில் விஜிலன்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா கமிட்டி தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் டி.இ. முனுசாமி உள்ளார்.

இவரின் பேத்தி பிரமிளா 13 வயது சிறுமி, தனது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வருட காலமாக தனது தந்தை கொடுத்த சிறுசேமிப்பு பணம் ரூபாய் 10 ஆயிரத்தில் 50க்கும் மேற்பட்டோருக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட நிவாரண தொகுப்பு வழங்கினார்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி