மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய சசிகலா

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய சசிகலா
X

மழை பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகளை, சசிகலா வழங்கினார். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வி.கே சசிகலா வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்தில், பல்வேறு அரசியல் கட்சியினர் அரிசி, பாய், புடவை போன்ற நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்

அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே. சசிகலா இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, திருப்போரூர், இல்லலூர், மானாமதி, கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது ஏராளமான வி கே சசிகலா ஆதரவாளர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!