ஆனூரில் 100 நாட்கள் வேலையில் திமுகவினர் தலையீட்டை கண்டித்து சாலை மறியல்

ஆனூரில் 100 நாட்கள் வேலையில் திமுகவினர் தலையீட்டை கண்டித்து சாலை மறியல்
X
ஆனூர் ஊராட்சியில் நூறு நாட்கள் வேலை திட்டத்தில் திமுக தலையீடை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஆனூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் திமுகவினர் தலையிடுவதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ஆனூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவினர் தலையீடு காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஊராட்சியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வழங்கப்பட வில்லை. மேலும் திமுகவினர் தலையீடு காரணமாக உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனை கண்டித்தும் தேசிய ஊரக வேலை செய்யும் பெண்கள் ஒன்று கூடி சாலையில் புட்செடிகளை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த திருக்கழுக்குன்றம் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வேலை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், ஊதியம் வழங்க நடவடிக்கை மேள்கொள்ளப்படும், என்று அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags

Next Story
ai solutions for small business