கொரொனா தொற்றுஏற்பட்ட கல்குவாரியில் மீண்டும் பணிகள்: பொதுமக்கள் அச்சம்!

கொரொனா தொற்றுஏற்பட்ட கல்குவாரியில் மீண்டும் பணிகள்: பொதுமக்கள் அச்சம்!
X

அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் கல்குவாரி

கொரொனா தொற்று ஏற்பட்ட கல்குவாரியில் மீண்டும் பணியாட்கள்: அச்சத்தில் கிராம மக்கள்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய குன்னவாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல் குவாரியில் ஊரடங்கு நேரத்திலும் வெடி வெடித்தும் குவாரியில் ஆட்கள் வேலை செய்து வருகின்றனர்.

அரசு கொடுத்த அளவை மீறி அதிகமாக குவாரி தோண்டப்பட்டுள்ளதாக கூறும் அப்பகுதி மக்கள் இதனால் அருகாமையில் இருக்கக்கூடிய குடியிருப்புகளில் விரிசல் ஏற்பட்டும், வெடி வெடித்து மருந்து புகை வருவதால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு கண் எரிச்சல்,கண் பாதிப்படுவது வழக்கமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்

ஆகவே தற்போது ஊரடங்கு நேரத்திலும் இவ்வாறு செயல்படுவது வருத்தம் அளிக்க கூடிய செயலாகவும் மேற்படி குவாரியில் வேலை செய்த இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அங்கு வேலை பார்க்கும் அனைத்து நபர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!