நாளை இரவு 11 மணிவரை மட்டுமே விடுதிகள் இயங்க அனுமதி :மீறினால் சட்ட நடவடிக்கை
மாமல்லபுரம் கடற்கரையில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு சார்பாக இயற்கை சீற்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு சார்பாக இயற்கை சீற்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு வீரர்கள் 31 பேர் பங்கேற்று சுனாமி, மழை வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது குறித்து ஒத்திகையை நிகழ்த்திக் காட்டினர்.
இந்நிகழ்ச்சியில் தலைமை தாங்கிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஓமிக்ரான் என்கின்ற உருமாறிய கொரோனா தொற்று நோய் கட்டுப்படுத்துவதற்காக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு 11 மணி வரை மட்டுமே விடுதிகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி புத்தாண்டை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் ஷாகிதா பர்வீன், மாமல்லபுரம் துணைக் கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரன், திருகழுகுன்றம் வட்டாட்சியர் சிவசங்கரன், மாமல்லபுரம் காவல் துறை ஆய்வாளர் மணிமாறன்,மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu