நாவலூர் வார்டு மெம்பர் வேட்பாளர் மனுவை நிராகரிக்க கோரிக்கை

நாவலூர் வார்டு மெம்பர் வேட்பாளர் மனுவை நிராகரிக்க கோரிக்கை
X

புகார் அளிக்க வந்த லட்சுமி.

நாவலூர் வார்டு மெம்பர் வேட்பாளர் மனுவை நிராகரிக்க அதே வார்டில் போட்டியிடும் மற்றொரு பெண் புகார் அளித்துள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு தற்போது ஊரக ஊராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாவலூர் 4 வது வார்டு மெம்பர் வேட்பாளர் ரம்யா வேட்பு மனுவை தள்ளுபடி செய்யும்படி, தேர்தல் அலுவலரிடம் அதே வார்டில் போட்டியிடும் லட்சுமி புகார் மனு அளித்துள்ளார்.

புகாரில் கூறியிருப்பதாவது: நாவலூர் ஊராட்சி 4 வது வார்டு மெம்பர் பதவிக்கு போட்டியிடும் ரம்யா என்பவர் காலாவதியான பழைய இந்து ஆதிதிராவிடர் சாதி சான்றிதழை மனுதாக்கல் செய்துள்ளார். அவர் விண்ணப்பித்த புதிய சாதி சான்றிதழ் வருவைத்துறையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே முறையான விசாரணை செய்து, அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என அதே வார்டில் போட்டியிடும் லட்சுமி புகார் அளித்துள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்ல தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!