செங்கல்பட்டில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ 13.8 லட்சம் காக்கும் கரங்கள் காவலர்கள் வழங்கல்

செங்கல்பட்டில் இறந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ 13.8 லட்சம் காக்கும் கரங்கள் காவலர்கள் வழங்கல்
X

செங்கல்பட்டில் பணியின் போது இறந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு காக்கும் கரங்கள் காவலர்கள் ரூ 13 லட்சத்து 80 ஆயிரம் நிவாரண நிதி உதவி வழங்கினர்.

செங்கல்பட்டில் பணியின் போது இறந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு, காக்கும் கரங்கள் காவலர்கள் சார்பில் ரூ 13 லட்சத்து 80 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்தவர் தலைமை காவலர் தனிகைவேல். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 18 -ம் தேதி, பணியில் இருக்கும்போது பணி நிமித்தமாக வெளியில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் அவருடன் பயிற்சி பெற்ற காவலர்கள், 2592 காவலர்கள் சார்பில் நிதி திரட்டி ரூ, 13.80 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது.

காக்கும் கரங்கள் காவலர்கள் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள காவலர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் அவரிடம் பணியாற்றிய சக காவலர்கள் பேசியபோது, தலைமை காவலர் தனிகைவேல், கடந்த 1997-ம் ஆண்டு இரண்டாவது பேட்ஜ் காவல் பணியில் சோர்ந்து துடிப்புடன் பணியாற்றி, பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக செயலாற்றி பல்வேறு பாராட்டுகளை பெற்றவர்.

காவலர் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.13 லட்சத்து 80 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. தமிழகத்தில் இதுவரை பணியில் இருந்தபோது வீர மரணம் அடைந்த 16 காவலர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story