தனியார் நிறுவனத்தை கண்டித்து இந்திய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்பாட்டம்

தனியார் நிறுவனத்தை கண்டித்து  இந்திய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்பாட்டம்
X

செங்கல்பட்டு அருகே இந்திய தொழிலாளர் சங்கம் தனியார் நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தனியார் நிறுவனத்தை கண்டித்து இந்திய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்பாட்டம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே ஆலத்தூரில் உள்ள யூரோ லைஃப் என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரண்டு மாத ஊதியம், ஊதிய உயர்வு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்காள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்று வருடங்களாக வழங்கப்படாமல் இருக்கும் போனஸ் தொகையை வழங்கக்கோரியும். நான்கு வருடங்களாக ஊதிய உயர்வு ஏதும் வழங்கப்படாததை கண்டித்தும், வருங்கால வைப்பு நிதி கணக்கில் செலுத்தப்படாத 14 மாத நிலுவை தொகையை வட்டியுடன் சேர்த்து உடனே செலுத்த வேண்டியும், மிகை நேர பணிக்கான ஊதியத்தை உடனே வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே இந்திய தொழிலாளர் சங்க மையம் சி.ஐ.டி.யு சங்க செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சேஷாத்ரி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்டத் தலைவர் சேஷாத்திரி, சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் கா.பகத்சிங்தாஸ், சி.பி.எம் வட்ட செயலாளர் எம்.செல்வம், மற்றும் இந்திய தொழிலாளர் சங்கம் மையம் சார்பாக நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future