மாமல்லபுரத்தில் பொங்கலை முன்னிட்டு போட்டி: ஆர்வமுடன் பங்கேற்ற பெண்கள்

மாமல்லபுரத்தில் பொங்கலை முன்னிட்டு போட்டி: ஆர்வமுடன் பங்கேற்ற பெண்கள்
X
மாமல்லபுரத்தில் நடந்த கோலப்போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற பெண்கள். 
மாமல்லபுரத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில், பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், கலங்கரை விளக்கு மக்கள் நல சேவை மையம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், 14 ஆம் ஆண்டு பொங்கல் விழா, விசிக மாநில தொண்டரணி செயலாளர் கிட்டு ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்த நிகழ்வில் பெண்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமைப்பின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடுவது வழக்கம், பெண்களுக்கான போட்டிகளில் கோலபோட்டி, இசை சேர் விளையாட்டு சிறுவர்களுக்கான ஸ்லோவ் சைக்கிள் என சொல்லக்கூடிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆர்வமுடன் பெண்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். விசிக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!