மாமல்லபுரத்தில் பொங்கல் விழா போட்டிகள் பரிசளிப்பு விழா

மாமல்லபுரத்தில் பொங்கல் விழா போட்டிகள் பரிசளிப்பு விழா
X
மாமல்லபுரத்தில் பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி கிட்டு வழங்கினார்.
மாமல்லபுரத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கு மக்கள் நல சேவை மையம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 14 ஆம் ஆண்டு பொங்கல் விழா சமூக ஆர்வலரும், விசிக மாநில தொண்டரணி செயலாளருமான வீ கிட்டு ஒருங்கிணைப்பில் நடைபெற்றது,

இந்நிகழ்வில் பெண்கள், ஆண்கள் சிறுவர்கள் என அனைவருக்கும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது., ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலங்கரை விளக்கு அமைப்பின் சார்பில் பொங்கல் விழா கொண்டாடுவது வழக்கம், பெண்களுக்கான போட்டிகளில் கோலபோட்டி, இசை சேர் விளையாட்டு சிறுவர்களுக்கான ஸ்லோவ் சைக்கிள் என சொல்லக்கூடிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது,

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சிறுத்தை கிட்டு ஒருங்கிணைப்பில் நேற்று நடைபெற்றது. விசிக பொறுப்பாளர்கள் பார்வேந்தர், கனல்விழி, உதயகுமார், அமிர்தம் பாண்டியன், இ சி ஆர் அன்பு மல்லை சாலமன், பிரகாஷ்,மணமை சண்முகசுந்தரம், அதிமுக நகர செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் பரிசு பெற்ற தீபா என்பவருக்கு ஏ சி மற்றும் இரண்டாம் பரிசு அரை பவுன் தங்க நாணயம் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கினர், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!