சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் சார்பில் குளம் சீரமைக்கும் பணி

சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் சார்பில் குளம் சீரமைக்கும் பணி
X

குளம் சீரமைக்கும் பணியின் துவக்க பூஜை.

சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் சார்பில் பொன்பதர் கூடத்தில் குளம் சீரமைக்கும் பணி துவங்கியது.

சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கத்தின் அங்கமான ஓராசிரியர் பள்ளிகள் சார்பாக திருக்கழுக்குன்றம் அடுத்த பொன்பதர் கூடத்தில் குளம் சீரமைக்கும் பணி துவங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட பொன்பதர் கூடம் கிராமத்தில் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த குளத்தை சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கத்தின் அங்கமான ஓராசிரியர் பள்ளிகள் நிர்வாகம் கிராம மக்களுடன் இணைந்து குளத்தை தூர்வாரும் பணியை இன்று துவங்கியது.

குளம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

இந்நிறுவனமானது தமிழகத்தின் 10 மாவட்டங்களில் 1200 கிராமங்களில் கல்வி பணியாற்றி வருகிறது. இதன்மூலம் 34,500 மாணவ மாணவியர்கள் பயனடைந்து வருகிறார்கள். கல்வி பணியுடன் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் பல்வேறு பணிகளை கடந்த 15 வருடங்களாக ஓராசிரியர் பள்ளி நிர்வாகிகள் சேர்மன் ஸ்ரீ எஸ். வேதாந்தம், தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உபதலைவர் டாக்டர் ஸ்ரீமதி அகிலா ஸ்ரீனிவாசன் கௌரவசெயலாளர் ஸ்ரீ கிருஷ்ணம்மாச்சாரி, பொருளாளர் ஸ்ரீ தணிகாசலம் போன்றோர் செய்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த கிராம அபிவிருத்திக்கான இலவசமாக கழிப்பறையுடன் கூடிய குளியலறைகள் ஏழை மக்களுக்கு கட்டித்தருவது, மருத்துவ முகாம்கள் நடத்துவது, கிராம குளங்கள் தூர்வாரும் பணிகள் போன்ற பல பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதன் ஓர் அங்கமாக ஆகஸ்ட் மாதம் 10 ம் தேதி அன்று அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியா டெவலப்மெண்ட் அண்ட் ரிலீஃப் பண்டு மூலமாக சதீஷ் & உஷா குப்தா ஆகியோர் அளித்த நன்கொடை மூலம் மூன்று குளங்கள் தூர்வாரும் பணிகள் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிள்ளைப்பாக்கம், ஈராளச்சேரி, உத்திராம்பட்டு ஆகிய கிராமங்களில் துவங்கப்பட்டன.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் அருங்குளம் கிராம குளம் பிரேக்ஸ் இந்தியா பி. லிட் நிறுவனத்தின் நன்கொடை மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 42 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன.

நன்கொடை அளித்த இந்தியா டெவலப்மெண்ட் அண்ட் ரிலீஃப் பண்டு மற்றும் ஓராசிரியர் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு மக்கள் மிகுந்த நன்றி தெரிவித்தனர். அதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் பொன்பதர்கூடம் கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் குளம் அமெரிக்காவைச் சேர்ந்த திரு.பிரவீன் குமார் டேண்ட்லே அளித்த நன்கொடையில் தூர்வாரும் பணி துவங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஓராசிரியர் பள்ளி சார்பில் விஜயராகவன், ஸ்ரீநிவாசன், மகேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி