கொரொனா கட்டுப்பாடுகளை மீறிய வணிகர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

கொரொனா கட்டுப்பாடுகளை மீறிய வணிகர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
X
திருப்போரூரில் கொரொனா கட்டுப்பாடுகளை மீறிய வணிகர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

திருப்போரூர் பகுதியில் கொரொனா கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட மளிகை கடை மற்றும் உணவகங்களின் உரிமையாளர்களிடம் திருப்போரூர் காவல் நிலைய ஆய்வாளர் கலைச்செல்வி ஆலோசனை மேற்கொண்டு கொரொனா கட்டுப்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கினார்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரொனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது, இதன் காரணமாக அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணிவரை மட்டுமே கடைகள் செயல்படுத்தவேண்டும் என தமிழக அசு அறிவித்துள்ளது,

இந்த நிலையில் திருப்போரூர் பகுதியில் கொரொனா கட்டுப்பாடுகளை மீறி கடைகளை நடத்திய வணிகர்களுக்கு பல முறை எச்சரிக்கை விடுத்தும் கடைகளை நடத்தி வந்துள்ளனர், இதன் காரணமாக திருப்போரூர் காவல் நிலையத்தில் நேற்று வணிகர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,

இதில் வணிகர்களுக்கு கொரொனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும், சமுக இடைவெளி முகக்கவசம் உள்ளிட்டவற்றை கடைபிடிக்கவேண்டும் என்பவை வணிகர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது, மீறினால் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்,

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!