மாமல்லபுரத்தில் கைவினை கலைஞர்களுக்கு நகர்ப்புற கண்காட்சி திடல் திறப்பு
மாமல்லபுரத்தில் கைவினை கலைஞர்களுக்கு நகர்ப்புற கண்காட்சி திடலை பூம்புகார், காதி மேலாண்மை செயலாளர் அபூர்வா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
பூம்புகார் என்று அனைவராலும் அறியப்படும் தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக் கழகம் தமிழ்நாட்டின் கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் கைவினை கலைஞர்களின் திறமையை மேம்படுத்த உரிய பயிற்சி அளித்து கைவினை கலைஞர்களுக்கு சமூக பொருளாதார பாதுகாப்பு அளித்தல் மற்றும் கைத்தொழில் கைவினை கலைஞர்களின் கலைப் படைப்பு மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரித்தல் ஆகிய மேம்பாட்டு பணிகளை தனது முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுத்தி வருகிறது.
இந்நிறுவனம், மத்திய மற்றும் மாநில அரசின் நிதியை கொண்டு மாமல்லபுரம் இ.சி.ஆர்., சாலையில் சுமார் 4.45 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 4.24 கோடி செலவில் கைவினை கலைஞர்களுக்காக நகர்ப்புறக் கண்காட்சி திடலை அமைத்துள்ளது.மாமல்லபுரத்தில் கைவினை கலைஞர்களுக்கு நகர்ப்புற கண்காட்சி திடலை பூம்புகார், காதி மேலாண்மை செயலாளர் அபூர்வா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
இந்தக் கண்காட்சி திடலில் சிற்பிகள் தாங்கள் செதுக்கிய சிலைகளை விற்பனை செய்வதற்காக 36 விற்பனைக் கூடம், வெளியரங்கம், கைவினை கலைஞர்கள் தங்குமிடம் மற்றும் வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த, கண்காட்சி திடல் 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது இங்கு, உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் கலை, கலாச்சாரம் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு, முதல் கட்டமாக உணவுக் கூடம் துவங்கப்பட்டுள்ளது.
மன நோயிலிருந்து நலம் பெற்றவர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இது லாப நோக்கமற்ற மனநோயாளிகள், புழல் சிறை கைதிகள் மேம்பாட்டிற்காக செயல்பட்டு வரும் சென்னை மிஷின் டிரஸ்ட் என்ற அறக்கட்டளை இணைந்து செயல்படும் உணவுக்கூடம் ஆகும்.
இந்த உணவுக் கூடத்தில் இருந்து கிடைக்கும் நிகர லாபத்தினை சிற்பிகள் மற்றும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டிற்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த கண்காட்சி திடலில் சிலைகள் உற்பத்தி செய்யும் பொருட்களான பஞ்சலோக சிலைகள், பித்தளை பொருட்கள், மரச்சிற்பம், கற் சிற்பம், தஞ்சாவூர் ஓவியம், களிமண், காகிதக் கூழ் பொம்மைகள் மற்றும் சுடு களிமண் சிற்பங்கள் போன்றவைகள் காட்சிப்படுத்தி நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu