பாண்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடனுக்காக அல்லல்படும் விவசாயிகள்

பாண்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடனுக்காக அல்லல்படும் விவசாயிகள்
X
திருப்போரூர்: பாண்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாய கடனுக்காக அல்லல்படும் விவசாயிகள்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய நல்லூர் கொல்லமேடு ஊராட்சியில் வசிப்பவர் முனியாண்டி இவர் அதே பகுதி நெய்குப்பி ஊராட்சிக்குட்பட்ட ஆமைப்பாக்கம் கிராமத்தில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

அதில் விவசாயம் செய்ய போதுமான தொகை இல்லாததால் அருகே உள்ள பாண்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் கடன் பெற முயன்றுள்ளார். கூட்டுறவு வங்கியில் உள்ள கூட்டுறவு தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் அனைத்து வங்கிகளிளும் ஆட்சேபனை கடிதம் வாங்கி வர சொல்லி உள்ளனர், இவரும் 10 நாட்களுக்கும் மேலாக நடையாய் நடந்து ஒவ்வொரு வங்கியிலும் ஆட்சேபனை கடிதம் வாங்கி கொடுத்துள்ளார்.

அத்தனை ஆவணங்களையும் பெற்றுக்கொண்ட பிறகு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக விவாசாயி முனியாண்டியை இன்று வா, நாளை வா என அலைக்கழித்து உள்ளனர்.

இவரும் தொடர்ந்து முகம் சுளிக்காமல் வங்கிக்கு சென்றுள்ளார். இறுதியில் கூட்டுறவு வங்கியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் உனக்கு எங்கள் வங்கியில் கடன் கிடையாது, உனக்கு உங்கள் கிராமத்திற்கு அருகே உள்ள குழிப்பான் தண்டலம் கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறி ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

கூட்டுறவு வங்கியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரது செயல்பாடுகள் மிகுந்த வருத்தம் அளிக்கிறதாக தெரிவித்தார் அந்த விவசாயி. அலட்சிய போக்கோடு வேண்டும் என்றே அலைய விட்டஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளை ஒருமையில் பேசும் கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை உயர் அதிகாரிகள் பார்த்து கண்டிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil