மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிலான ஆரோக்கிய திருவிழா

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிலான ஆரோக்கிய திருவிழா
X
கின்னஸ் உலக சாதனைக்காக அதிக நபர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஒரே இடத்தில் ஓடி சாதனை நிகழ்த்தினர்.

பாரத் தமிழ்நாடு ஏற்பாடு செய்த மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிலான ஆரோக்கிய திருவிழா மற்றும் கின்னஸ் உலக சாதனைக்கான நிகழ்ச்சியில், அதிக நபர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஒரே இடத்தில் ஓடி சாதனை நிகழ்த்தினர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காட்டில் செயல்பட்டு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய நிறுவனத்தில் சிறப்பு ஒலிம்பிக் பாரத் என்ற அமைப்பு இந்தியாவின் 75வது சுதந்திர திருநாளை விழாவை கொண்டாடும் விதமாக இந்தியாவில் உள்ள 75000 தடகள வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனையை 7500 மருத்துவர்களை கொண்டு 750 விளையாட்டு மையங்களில் 75 நகரங்களில் மாற்று திறனாளிகளுக்கான தேசிய அளவிலான ஆரோக்கிய திருவிழா மற்றும் அதிக நபர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஒரே இடத்தில் ஓடி கின்னஸ் உலக சாதனை நிகழ்வை முன்னெடுத்தனர்.
நிகழ்வில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக விளையாட்டுத்துறை இயக்குநரும், தமிழ்நாடு மாற்றுதிறனாளி மாணவர்களின் பயிற்சியாளருமான மோகன், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைகழக துணை வேந்தர் டாக்டர் சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!