கொரோனா விழிப்புணர்வு மராத்தான்; 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கொரோனா விழிப்புணர்வு மராத்தான்; 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
X

கேளம்பாக்கத்தில் நடந்த கொரோனா விழிப்புணர்வு மராத்தான்.

திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட மராத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட கேளம்பாக்கம் காமராஜர் சாலையில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு கொரோனா விழிப்புணர்வு மராத்தான் போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டியானது கேளம்பாக்கம் காமராஜர் சிலையில் துவங்கி திருப்போரூர் அம்பேத்கர் சிலை அருகில் முடிவு பெற்றது. இந்த போட்டியினை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்டு முதல் 5 இடத்தை பிடித்த வீரர்களுக்கு சன்மானமும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில செயலாளர் விடுதலை செழியன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் விடுதலை நெஞ்சம், திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!