கழகங்களை மிஞ்சும் வகையில் மனிதநேய மக்கள் கட்சியினர் வேட்புமனு தாக்கல்

கழகங்களை மிஞ்சும் வகையில் மனிதநேய மக்கள் கட்சியினர் வேட்புமனு தாக்கல்
X

நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர் தவுளத்பீவி

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளை மிஞ்சும் அளவிற்கு நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்த மனிதநேய மக்கள் கட்சியினர்

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது, இதில் 15 வார்டுகளில் நேரடியாக திமுக களம் இறங்குகிறது, மற்ற மூன்று இடங்கள் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது,

பத்தாவது வார்டு மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உதயசூரியன் சின்னம் வழங்கப்பட்டுள்ளது, 10வது வார்டு வேட்பாளர் தவுளத்பீவி இன்று திமுக ,அ தி மு க கட்சிகளை மிஞ்சும் அளவிற்கு நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் மாலை அணிவித்தும், பட்டாசுகள் வெடித்தும் ஊர்வலமாக சென்று திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

Tags

Next Story
ai marketing future