செங்கல்பட்டில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்
செங்கல்பட்டில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியுள்ளன,
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை மேற் கொள்ளுமாறு தமிழக அரசின் அறிவுறுத்தியதின்படி மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சைக்காக சித்தா மருத்துவமனைகள் துவங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக செங்கல்பட்டு அருகே தண்டரையில் உள்ள ஆசான் பொறியியல் கல்லூரியில் 150 படுக்கை வசதிகளுடன் அமைப்பட்ட சித்த மருத்துவமனையை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் திறந்துவைத்தார்,
அப்போது காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் க.செல்வம், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ், மாவட்ட சுகாதாரதுறை துணை ஆணையர் பிரியா மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதனையடுத்து பொது மக்களுக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டது, இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியது: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றை ஒழிப்பதற்காக திருப்போரூர் தொகுதியில் ஆசான் தனியார் கல்லூரியில் 150 படுக்கைகள் கொண்ட சித்தா மருத்துவமனை துவங்கப்பட்டது,
இங்கு கொரோனா தொற்று உறுதியான ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சேர்த்து மொத்தமாக 5066 படுக்கைகள் உள்ளது, இதில் 3302 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் உள்ளது, மேலும் தனியார் மருத்துவமனைகளில் பாதியளவு படுக்கைகளை அரசு கேட்டுள்ளது அந்த வேலையும் நடைபெற்று வருகிறது, செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற எல்லாவதமான முயற்சிகளும் வேகமாக எடுத்துவருகிறோம் என்று தெரிவித்தார்,
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu