மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
X

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் நடந்த சமபந்தி விருந்தில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபு.

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் சமபந்தி விருந்தில் கலந்துகொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தலசயனப் பெருமாள் கோயிலில் மதிய அன்னதானம் அரசால் வழங்கப்படுகிறது, இதில் கலந்துகொள்ள சென்ற நரிக்குறவ பெண்ணான அஸ்வினியை கோயில் ஊழியர்கள் தரக்குறைவாக பேசி சாப்பிட விடாமல் திருப்பி அனுப்பியதால் அந்தப் பெண் தனக்கு நேர்ந்த அவமானத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதன் விளைவாக இன்று அனைவருக்கும் சமபந்தி விருந்து அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,

இதில் கலந்துகொண்ட இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆலயத்தை ஆய்வு செய்து பின்னர் நரிக்குறவர்களுடன் அமர்ந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார். பின்னர் அனைவருக்கும் இலவச வேட்டி சேலைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நரிக்குறவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!