மாசி மகம்: மாமல்லபுரம் கன்னியம்மனுக்கு பூஜை நடத்திய இருளர் இன மக்கள்
சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட இருளர் இன மக்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில், இருளர் சமூகத்தினர், மாசி மாத பௌர்ணமி நாளில் குடும்பத்துடன் ஒன்று கூடுவது வழக்கம். மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், மாமல்லபுரம் கடற்கரையில் ஆங்காங்கே புடவைகள் மற்றும் தென்னங்கீற்றுகள் ஆகியவற்றை கொண்டு திறந்தவெளியில் குடில்கள் அமைத்து கன்னியம்மனை வழிபட்ட அவர்கள், நேர்த்திக்கடனும் செலுத்தினர்.
திருமணம், நிச்சயதார்த்தம், மொட்டையடித்து காது குத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும் இருளர் மக்களின் பாரம்பரிய பாடல்களை பாடியபடியும் நடனமாடினர். இதில் செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுவை, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இருளர் இன மக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu