திருப்போரூர் அருகே கலாம் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவுநாள் மாரத்தான் போட்டி

திருப்போரூர் அருகே கலாம் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவுநாள் மாரத்தான் போட்டி
X

முள்ளிபக்கம் ஊராட்சியில் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

கலாம் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கலாம் கல்வி மையம் அறக்கட்டளை சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட முள்ளிபக்கம் ஊராட்சியில் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கலாம் கல்வி மையம் அறக்கட்டளை சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி கலந்துகொண்டு மாபெரும் மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு முள்ளிபக்கம் கூட்டுச் சாலையில் இருந்து கரும்பாக்கம் வரை ஐந்து கிலோமீட்டர் வரைச் சென்று திரும்பி வந்த முதல் 4 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கொரோனா தோற்று நாட்களில் வீட்டிலேயே முடங்கி இருந்த இளைஞர்களை ஊக்கப்படுத்த இப்போட்டி நடத்தப்பட்டதாக தெரிவித்தனர். பின்னர் மரக்கன்றுகள் நடப்பட்டது இந்நிகழ்ச்சியில் பிரகாஷ். விநாயகம். விஜயகாந்த். உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்