மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்: கனமழையால் மரங்கள், மின்கம்பங்கள் சேதம்

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்: கனமழையால் மரங்கள், மின்கம்பங்கள் சேதம்
X

மாமல்லபுரம் பகுதியில், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

மாமல்லபுரத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழையால், மரங்கள் சாய்ந்து மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

வங்கக் கடலில் நிலவும், தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மாமல்லபுரம் அருகே இன்று கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது மாமல்லபுரம் பஜார் வீதி மற்றும் கடற்கரையில் அமைந்துள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது அங்குள்ள கடைகளும் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் சாலையில் வீசிய காற்று காரணமாக, பல இடங்களில் மரங்கள் சாய்ந்து, மின்கம்பங்களில் ஒயர்கள், சாலைகளில் அறுந்து கிடக்கின்றன.

முன்னெச்சரிக்கையாக, அனைத்து கடைகளும் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பாதுகாப்பு கருதி, மின் விநியோகம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil