மாமல்லபுரம் கடற்கரை மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடியது

மாமல்லபுரம் கடற்கரை மக்கள் கூட்டம் இன்றி   வெறிச்சோடியது
X

வெறிச்சோடிய மாமல்லபுரம் கடற்கரை

சுற்றுலா தலங்களுக்கு அரசு அனுமதி அளித்தும் மாமல்லபுரம் கடற்கரை மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரைகளில் பொதுமக்கள் செல்ல அனுமதி அளித்ததை அடுத்து, இன்று காலைமுதல் சுற்றுலா பயணிகள் குறைந்த அளவிலேயே வந்தனர்.

தமிழகத்தில் பல தளர்வுகளை அறிவித்து செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் பல்வேறு புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் குறிப்பாக நீண்ட மாதங்களாக கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், தற்போது இன்று முதல் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


அதன் ஒரு பகுதியாக முக்கிய சுற்றுலா தலமான மாமல்லபுரம் கடற்கரையில் இன்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று திங்கட்கிழமை என்பதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த அளவிலான மக்களே வந்திருந்தனர்.

இதனால் மாமல்லபுரத்தில் உள்ள கடைகளின் பணியாளர்கள், சிறு வியாபாரிகள் கவலையடைந்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி