உலக மரபு வார விழா: மாமல்லபுரத்தில் இலவசமாக சுற்றிப் பார்க்க அனுமதி

உலக மரபு வார விழா:  மாமல்லபுரத்தில் இலவசமாக சுற்றிப் பார்க்க அனுமதி
X
உலக மரபு வார விழாவை முன்னிட்டு, சுற்றுலாத்துறை சார்பில், மாமல்லபுரத்தில் இன்று ஒரு நாள் இலவசமாக சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், ஆண்டு தோறும் உலக மரபு வார விழா கொண்டாடுவது வழக்கம். அதை முன்னிட்டு, உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமான மாமல்லபுரத்தில் 19 ஆம் தேதியில் இருந்து, 25 ஆம் தேதி வரை, உலக மரபு வார விழா நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாமல்லபுரத்தில் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் நிகழ்ச்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது.

உலக மரபு வாரவிழா முதல் நாளான இன்று, மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சுற்றுலா பகுதிகளுக்கும் பொது மக்கள் இலவசமாக பார்க்க சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து இருந்தது, இருப்பினும் கன மழை காரணமாக, சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. இருப்பினும் சொற்ப பயணிகளே வருகை தந்து, மாமல்லபுரம் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டை பாறை, கலங்கரை விளக்கம், ஐந்து ரதம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!