கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கேட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கேட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
X

வண்டலூர் அருகே சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கேட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் வண்டலூர் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் கேளம்பாக்கம் சாலை, புதுபாக்கத்தில் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டும், பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் நீதி வேண்டும், நீதி வேண்டும், சிதைக்காதே, சிதைக்காதே மாணவிகளின் வாழ்க்கையை சிதைக்காதே, தண்டனை கொடு, தண்டனை கொடு மாணவியை படுகொலை செய்த கயவர்களுக்கு தண்டனை கொடு, பள்ளியின் உரிமத்தை ரத்து செய் என கோஷங்களை எழுப்பினர்.
தகவலறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் மாண்வர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சட்டக்கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களிடம் பேசி போரட்டத்தை கைவிட வைத்தனர்.

Tags

Next Story