காமராஜர் பிறந்தநாள் விழா விசிக எம். எல். எ. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

காமராஜர் பிறந்தநாள் விழா விசிக எம். எல். எ.  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
X

காமராஜர் சிலைக்கு திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

திருப்போரூரில் காமராஜர் பிறந்த நாளையொட்டி சிலைக்கு விசிக எம்.எல்.எ. மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா நடைபெற்றது, நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் மற்றும் திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி,

முன்னாள் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ் ஆர் எல் இதயவர்மன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் சூ .ர.ராஜ்குமார்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் விடுதலை நெஞ்சன் உள்ளிட்டோர் பங்கேற்று கர்ம வீரர் காமராஜர் திருவுருவ சிலை க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்,

தொடர்ந்து, கேளம்பாக்கம் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்,

அதேபோல், தையூர், கோமான்நகர் பேரூந்து நிறுத்துமிடம் அருகில் கல்வி தந்தை காமராஜர் மற்றும் தியாக தந்தை தொல்காப்பியர் ஆகியோரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், அங்கு, நலிந்தோருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது,

இந்நிகழ்வின் போது, தி.மு.க., திருப்போரூர் வடக்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் வாசுதேவன், திருப்போரூர் தொகுதியின் தகவல்தொழில் நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன், கேளம்பாக்கம் ஊராட்சி ஜோதி நகர் கிளை செயலாளர் கே.ஏ.டி.அன்பு. மற்றும் ஏராளமான, திமுக, விசிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!