தனியார் கல்லூரி மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய காவலாளி கைது

தனியார் கல்லூரி மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய காவலாளி கைது
X
கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாமாண்டு படித்து வரும் கல்லூரி மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய விடுதி காவலாளி கைது

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த படூரில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதியில் தங்கி அங்கேயே இரண்டாமாண்டு படித்து வரும் 19வயது கல்லூரி மாணவி ஒருவரின் செல்போன் எண்ணிற்கு ஆபாச வீடியோ வந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி, கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து செல்போன் எண் யாருடையது என விசாரித்ததில் விடுதி காவலாளியின் எண் என தெரியவந்தது. விடுதி இன் அண்ட் அவுட் ரிஜிஸ்டரில் இருந்து எண்ணை எடுத்து ஆபாச வீடியோ அனுப்பியுள்ளார் காவலாளி.

பின்னர் இது குறித்து கேளம்பாக்கம் காவல்துறைக்கு தெரியபடுத்தி கல்லூரி விடுதி காவலாளியான திருநெல்வேலியை சேர்ந்த பால சுப்ரமணி(42), என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!