திருக்கழுக்குன்றத்தில் அரசு பஸ் மோதி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

திருக்கழுக்குன்றத்தில் அரசு பஸ் மோதி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு
X

விபத்தில் பலியான ஆசிரியை மஞ்சுளாதேவி.

திருக்கழுக்குன்றத்தில் அரசு பஸ் மோதி பள்ளி ஆசிரியை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே அனுபுரம் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளாதேவி (50). இவர் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள பொன்பதர்கூடம் பகுதியில் உள்ள அரசினா் நடுநிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினாா்.

இவா் தினமும் கல்பாக்கத்திலிருந்து திருக்கழுக்குன்றத்திற்கு பஸ்சில் வந்து செல்வாா். அதைப்போல் இன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக திருக்கழுகுன்றம் பஸ்நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தாா். எம்ஜிஆர் சிலை அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த அரசு பஸ் ஒன்று மஞ்சுளா தேவி மீது மோதியது. அதில் அவா் படுகாயமடைந்தாா். உடனடியாக அருகே உள்ள திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு மஞ்சுளா தேவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அரசு பஸ் டிரைவரிடம் போலீசாா் விசாரித்து வருகின்றனர். பின்னர் ஆசிரியை மஞ்சுளா தேவி உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!