செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆடுகள் மர்ம சாவு
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் துஞ்சம், நெம்மேலி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் கால்நடைகளை வளர்த்துவருகின்றனர். இதில் வெள்ளாடுகள் அதிகம். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக இப்பகுதியில் உள்ள வெள்ளாடுகள் திடீரென நேய்வாய்பட்டு இறந்து வருகின்றன. இதில் துஞ்சம், நெம்மேலி உள்ளிட்ட கிராமங்களில் 150க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. இதனால் கால்நடைகளை வளர்த்துவரும் விசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து வட்டார கால்நடை மருத்துவமனையில் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். கால்நடை மருத்துவர் ஹேமாவதி, மருத்துவ உதவியாளர் சுப்பிரமணி ஆகியோர் தகவல் தெரிவித்த பின்னரும் கூட அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள் விவசாயிகள்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மோகனன் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நோய்வாய்ப்பட்டுள்ள ஆடுகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் கொண்டுவந்து வந்து காட்டினார். கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவினையும் வழங்கினர். மேலும் இறந்த ஆடுகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருக்கழுக்குன்றம் செயலாளர் கோதண்டம், மார்க்சிஸ்ட் கட்சியின் திருக்கழுக்குன்றம் வட்டச் செயலாளர் குமார் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.
மேலும் சங்கத்தின் சார்பில் கால்நடை உதவி இயக்குநர் புகழேந்தியிடமும் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள் கொண்டுவந்த நேய்த் தாக்குதலுக்கான ஆடுகளிடம் இருந்து மாதிரிகளை எடுத்துக்கொண்டதுடன் உடனடியாக பாதிக்கபட்டுள்ள கிராமங்களில் மருத்துவக்குழு மூலம் ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu