திருப்போரூரில் பொதுமக்களுக்கு இலவச கொரோனா தடுப்பு ஊசி முகாம்

திருப்போரூரில் பொதுமக்களுக்கு இலவச கொரோனா தடுப்பு ஊசி முகாம்
X

புதுப்பாக்கம் அப்துல்கலாம் திருமணமண்டபத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாம். 

திருப்போரூரில் பொதுமக்களுக்கு இலவச கொரோனா தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பாக்கம் அப்துல்கலாம் திருமணமண்டபத்தில் மாபெரும் பொதுமக்களுக்கான இலவச கொரோனா தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது. புதியதாக பொறுப்பேற்றுள்ள ஊராட்சி செயலர் ஏழுமலை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் ஆகியோர் இந்த முகாமை நடத்தினர்.

இம்முகாமினை இரண்டு சங்கங்களின் தலைவர் ஆர்டிஎன் .கேவ்இரமேஷ் , தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆர்டிஎன்.ஶ்ரீகுமார், சமுதாய சேவை ஒருங்கிணைப்பாளர் ஆர்டிஎன் ஜெயதேவ், முன்னாள் ஆர்டிஎன். ரவிசங்கர், சமுதாய மக்களின் மருத்துவசேவை ஒருங்கிணைப்பாளர் ஆர்டிஎன்.சரவணன் , மருத்துக்குழு ஒருங்கிணைப்பாளர் சுரேந்தர்ராஜ், ஆகியோர்கள் முகாமினை துவங்கிவைத்தனர்.

150க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு இலவச கொரோனா தடுப்பு ஊசியை செலுத்திக்கொண்டனர்கள். இம்முகாமில் கேளம்பாக்கம் அரசு ஆரம்பசுகாதார நிலையத்திலிருந்து வட்டார மருத்துவர் சுப்பிரமணியன் தலைமையில் மருத்துவக் குழுவினர்கள் கலந்துகொண்டு தடுப்பு ஊசியை பொதுமக்களுக்கு செலுத்தினர்.

இந்த தடுப்பூசி முகாமில் புதுப்பாக்கம் ஊராட்சிப்பொதுமக்கள், தூய்மைபணியாளர்கள், நூறு நாள் வேலைதிட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!