திருவடந்தை ஈசிஆர் சாலையில் விபத்து: காரில் சென்ற 4 பேர் படுகாயம்

திருவடந்தை ஈசிஆர் சாலையில் விபத்து: காரில் சென்ற 4 பேர் படுகாயம்
X

விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்கள், மீட்க பொதுமக்கள்.

திருவடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட விபத்தில், காரில் சென்ற 4 பேர் பலத்த காயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த திருவடந்தையில் நித்திய கல்யாண பெருமாள் திருக்கோவில் உள்ளது. தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் வசிக்கும் கணேசன் வயது 32 இவருடன் அவரது குடும்ப உறவினர்கள் நால்வர் காரில் திருவடந்தை கோவிலுக்கு வந்தனர்.

சுவாமி தரிசனம் செய்த பின்னர், வீட்டிற்கு செல்ல அவர்களது காரில் புறப்பட்ட நிலையில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக சாலையை கடக்க முயன்றபோது, காரின் ஓட்டுனர் பிரேக் பிடிக்க முயன்ற போது, பதற்றத்தில் தவறுதலாக ஆக்ஸிலேட்டரை மிதித்துவிட்டார்.

இதில், கார் வேகமாக சென்றதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் வேகமாக மோதியது. இதில் காரில் சென்ற நால்வருக்கும், பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!