உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக ஒன்றிய கவுன்சிலர் ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக  ஒன்றிய கவுன்சிலர் ஆலோசனை கூட்டம்
X
திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் ஆலோசனை கூட்டம் தாழம்பூர் மற்றும் புதுப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாழம்பூர் மற்றும் புதுப்பாக்கம் ஊராட்சியில், 2021 உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் குறித்து எஸ்ஆர்எல் இதயவர்மன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்தாலே அவர்கள் மனதில் நாம் நிற்பது நிஜமாகும் என்பதை உணர்ந்து மக்களுக்காக உழைக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தாழம்பூர் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் தாழம்பூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருணாகரன், நாவலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜாராம், தாழம்பூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ருசேந்திரபாபு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுப்பாக்கம் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் புதுப்பாக்கம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கிளைக் கழகச் செயலாளரும் தாமோதரன், சிறுசேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏகாம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Tags

Next Story
the future of ai in healthcare