/* */

திமுக கூட்டணியை பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர் : கே.எஸ். அழகிரி

திமுக கூட்டணியை பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

HIGHLIGHTS

திமுக கூட்டணியை பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர் : கே.எஸ். அழகிரி
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகம் செய்து கே.எஸ்.அழகிரி பேசினார்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் திருப்போரூர் திருக்கழுக்குன்றம் ஆகிய ஒன்றியங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் கங்கிரஸ் தலைவர் செந்தில் குமார் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

இதில் தமிநாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார் .இக்கூட்டத்தில் போட்டியிடும் மாவட்ட ஊராட்சி குழு - ஒன்றிய குழு - உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

பின்பு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த கே.எஸ் அழகிரி பொதுமக்கள் பொறுத்தவரை அரசியல் கட்சிகள் வேறுபட்டாலும் இந்த கூட்டணியை பெரிதும் விரும்புகிறார்கள்.

இந்த அரசு ஆரம்பகாலம் முதல் நல்ல முறையில் செயல்பட்டுவருகிறது.பிரதான விஷயங்களில் நேர்மையாக பணியாற்றி வருவதால் பொதுமகக்ளிடையே பெரும்.வரவேற்பபை பெற்றுள்ளது மத்திய அரசோடு மாநில அரசிற்க்கு இருக்க வேண்டிய நல்ல உறவை பேனுகின்றனர்.அதற்காக அண்ணா திமுக போல தங்களின் கொள்கையை விட்டு கொடுக்கவில்லை.

சட்ட மன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும்,குடியேற்ற தடை சட்டம் ,நீட் தேர்வு போன்ற மூன்று தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. வெளிபடை தன்மையுடன் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்துள்ள தீர்மானங்கள் இந்தியா முழுவதும் இருக்கின்ற எதிர்கட்சி மற்றும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

Updated On: 30 Sep 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  2. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  5. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  6. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  7. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  8. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  9. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  10. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு