திருக்கழுக்குன்றம் அருகே இருளர் பெண் கொலை : மாவட்ட போலீஸ் எஸ்பி விசாரணை

திருக்கழுக்குன்றம் அருகே இருளர் பெண் கொலை : மாவட்ட போலீஸ் எஸ்பி விசாரணை
X

திருக்கழுக்குன்றம் அருகே இருளர் பெண் கொலை வழக்கு தொடர்பாக மாவட்ட எஸ்பி விஜயகுமார் சம்பவ இடத்தில்  விசாரணை செய்தார்.

திருக்கழுக்குன்றம் அருகே இருளர் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி விசாரணை செய்து வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே கொத்திமங்கலம் ஊராட்சியில் வடக்குப்பட்டு கிராமத்தில் இருளர் பகுதியில் வசிப்பவர் ராமு என்பவர் மனைவி ஜோதி.

இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர் அதிகாலையில் காணவில்லையென தேடியபோது வீட்டின் அருகே உள்ள பாறைகள் நிறைந்த பகுதியில் மர்மமான முறையில் (நிர்வாண நிலையில்) இறந்து கிடந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போலீசார் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆய்வு மேற்கொண்டு பிரேதத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் மேலும் சம்பவம் குறித்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!