கோவளம் ஊராட்சியில் இருளர் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

கோவளம் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் சோபனா தங்கம்சுந்தர் தலைமையில் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் மக்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் சமபந்தி உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்மண் கலந்து கொண்டு நிவாரன பொருட்களை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில், கோவளம் ஊராட்சி மன்ற துணை தலைவர் பெ.ஆதிலட்சுமிபெருமாள், வார்டு உறுப்பினர்கள் முகமதுஇலியாஸ், சத்தியாகணேசன்,பத்மாவதி வீரராகவன்,தனலட்சுமி சங்கர், சந்திரபாபு,.பல்கிஸ்ஷேக் மோலா, தனலட்சுமி முருகன்,சம்பத்,மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture