மாமல்லபுரம் அருகே நடுக் கடலில் மீன் பிடிப்பதில், நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்களிடையே தகராறு பரபரப்பு

மாமல்லபுரம் அருகே நடுக் கடலில் மீன் பிடிப்பதில், நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்களிடையே தகராறு பரபரப்பு
X

மாமல்லபுரம் அருகே நடுக்கடலில் விசைப்படகு மீனவர்களை சுற்றி வளைத்து போராட்டம் நடத்திய நாட்டுப்படகு மீனவர்கள்.

மாமல்லபுரம் அருகே நடுக்கடலில் மீன் பிடிப்பதில் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மீனவ கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டது.

மாமல்லபுரம் அருகே கடலில் மீன்பிடிப்பதில் இரு மீனவ கோஷ்களிடையே மோதல் ஏற்பட்டு,நடுக்கடலில் கலவர சூழ்நிலை உருவானதால்,மீனவளத்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி கலவரம் ஏற்படுவதை தடுத்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே சூலேரிக்காடு மீனவர் கிராமத்திலிருந்து 2 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீனவா்கள் நாட்டுப்படகுகளில் சென்று மீன் பிடிப்பாா்கள்.ஆனால் சமீப காலமாக நாகப்பட்டிணம், கடலூா்,காரைக்கால் பகுதிகளை சோ்ந்த மீனவா்கள் விசைப்படகுகளில் வந்து,நாட்டுப்பகுகள் மீன் பிடிக்கும் 2 நாட்டிக்கல் கடல் மைல் பகுதிகளில் வந்து இழுவை வலைகளை பயன்படுத்தி அடிக்கடி மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.

விசைப்படகுகளின் இந்த செயலுக்கு நாட்டுப்படகு மீனவா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.விசைப்படகு மீனவா்களின் இந்த செயலால் தங்களுக்கு மீன் கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சிறு மீனவா்களான நாட்டுப்படகு மீனவா்கள் குற்றஞ்சாட்டினா். இதனால் அடிக்கடி மீனவா்களிடையே பிரச்னைகள் ஏற்பட்டு வந்தன.

இந்நிலையில் நேற்றும் விசைப்படு மீனவா்கள்,நாட்டுப்படகு மீனவா்கள் மீன் பிடிக்கும் கடல் எல்கைகளுக்கு வந்து மீன் பிடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து நாட்டுப்படகு மீனவா்கள் நங்கள் படகுகளில் கடலுக்குள் விரைந்து சென்றனா்.விசைப்படகுகளை முற்றுகையிட்டனா்.இரு தரப்பு மீனவா்களுக்கும் நடுக்கடலில் கடும்வாக்கு வாதங்கள் ஏற்பட்டன.

அதோடு நாட்டுப்படகு மீனவா்களுக்கு ஆதரவாக, சூலேரிக்காடு,தேவநேரி,நெம்மேலி,புதுகல்பாக்கம் பகுதிகளை சோ்ந்த மீனவா்களும் தங்கள் படகுகளுடன் முற்றுகை போராட்டத்தில் கலந்துகொள்ள கடலுக்குள் விரைந்தனா்.இதனால் இரு மீனவா்கள் கோஷ்டிகளிடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டு,கலவரம் நடக்கும் சூழ்நிலை உருவாகியது.பதட்டம் நிலவியது.

இத்தகவல் அறிந்த தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகம் மூலம் சம்பந்தப்பட்ட ஊர் தலைவர்களிடம் பேசினா்.அதோடு ஊா் மீனவா் சங்கங்களுடனும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மேலும் மீனவா் சங்கப்பிரதிநிதிகள்,ஊா் தலைவா்கள்,மீன்வளத்துறை அதிகாரிகள் படகுகளில் கடலுக்குள் சென்றனா்.அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த மீனவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தைகள் நடத்தினா்.

அதோடு கடலோர காவல்படையினரும் விரைந்து வந்தனா்.இரு தரப்பு மீனவா்களிடமும் நீண்ட நேரம் நடந்த பேச்சுவாா்த்தைக்குப் பின்பு இரு தரப்பும் போராட்டத்தை கைவிட்டு சமரசம் ஆனாா்கள். இதனால் மாமல்லபுரம் அருகே நடுக்கடலில் சுமாா் 3 மணி நேரம் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!