/* */

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் நாளை 24 இடங்களில் கொரொனா தடுப்பூசி முகாம்

திருப்போரூர்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் நாளை காலை-மாலை என 24 இடங்களில் கொரொனா தடுப்பூசி முகாம்.

HIGHLIGHTS

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் நாளை 24 இடங்களில் கொரொனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

கொரோனா தொற்றை கட்டுபடுத்த நாளை 12 ம் தேதி நடக்கும் சிறப்பு முகாமில் அனைவரும் பங்கேற்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ள ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று திருப்போரூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருப்போரூர் சட்டமன்றத்துக்கு உட்பட்ட திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் 50 சதவீதம் பேர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். நாளை நடக்கும் முகாமில் 100 சதவீத தடுப்பூசி போட செயல்பட வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்.

காலை கொரொனா தடுப்பூசி முகாம்கள் நடக்கும் இடங்கள்

திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் நாளை 12.09.2021 அன்று காலை மாலை என இரு பிரிவுகளாக பிரித்து தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், மெய்யூர் குப்பம் ஐ.சி.டி.எஸ், வெங்கம்பாக்கம் பள்ளி, நெய்குப்பி பள்ளி, விட்டிலாபுரம் பள்ளி, வசுவசமுத்திரம் அலுவலகம், புதுப்பட்டிணம் ஐ.சி.டி.எஸ், வாயலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அயப்பாக்கம் ஐ.சி.டி.எஸ், மாமல்லபுரம் ஐ.சி.டி.எஸ், வி.கே மண்டபம் குப்பம், தேவநேரி ஐ.சி.டி.எஸ், கொகிலமேடு குப்பம் கோயில், வென்புருஷம் ஐ.சி.டி.எஸ், குழிப்பாந்தண்டலம் ஐ.சி.டி.எஸ், நெல்வாய் பள்ளி, எடையூர் ஐ.சி.டி.எஸ், வடக்கடும்பாடி அம்மன் கோயில், இரும்புளி ஐ.சி.டி.எஸ், புலியூர் ஐ.சி.டி.எஸ், மனமை நூலகம், குன்னத்தூர் பான் அலுவலகம், பள்ளஈகை பள்ளி, நல்லூர் பள்ளி, சட்ராஸ் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 24 இடங்களில் நாளை 12.09.2021 காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறும்.

மாலை கொரொனா தடுப்பூசி முகாம்கள் நடக்கும் இடங்கள்

சட்ராஸ் சமுதாயக்கூடம், பூந்தண்டலம் பள்ளி, ஆமைப்பாக்கம் ஐ.சி.டி.எஸ், இளையனார்குப்பம் ஐ.சி.டி.எஸ், அகமது நகர் பி.கே.வி மஹால், புதுப்பட்டிணம் சமுதாயக்கூடம், உயலிக்குப்பம் சமுதாயக்கூடம், அயப்பாக்கம் கிராம ஐ.சி.டி.எஸ், மாமல்லபுரம் அண்ணல் காந்தி சாலை, கிழக்கு ராஜா சாலைப்பள்ளி, திருக்கழுக்குன்றம் சாலை ஐ.சி.டி.எஸ், கொகிலமேடு ஐ.சி.டி.எஸ், ஐந்துராதா ஐ.சி.டி.எஸ், ஆண்டிக்குப்பம் ஐ.சி.டி.எஸ்,, எச்சனூர் பான் அலுவலகம், கடும்பாடி ஈ சேவை மையம், அம்பாள் நகர் ஐ.சி.டி.எஸ், கொத்திமங்களம் பள்ளி, அச்சரவாக்கம் ஐ.சி.டி.எஸ், மனமை பான் அலுவலகம், குன்னத்தூர் காலணி ஐ.சி.டி.எஸ், நத்தம் பெண்கள் ஏல்நிலைப்பள்ளி, கரியச்சேரி பள்ளி ஆகிய இடங்களில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 7 மணி வரை கொரொனா தடுப்பூசி முகாம்கள் நடக்கும் இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Updated On: 11 Sep 2021 8:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  6. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  9. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  10. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!