செங்கல்பட்டில் தொடர் வழிப்பறி; 3 பேர் கைது

செங்கல்பட்டில் தொடர் வழிப்பறி;  3 பேர் கைது
X

செங்கல்பட்டு நகர காவல் நிலையம்.

செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவதாக செங்கல்பட்டு நகர போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதைத்தொடர்ந்து சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால், பின்னர் அவர்களை காவலர்கள் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த மூன்று இளைஞர்களும் செங்கல்பட்டு குண்டிர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் வயது24. வினோத்22. கௌதம் 28 என தெரியவந்தது. மேலும், இவர்கள் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் நகைகளை பறித்ததுள்ளதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து, மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்