திருப்போரூரில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி

திருப்போரூரில்  பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி
X
திருப்போரூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி நடைபெற்றது.
திருப்போரூரில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி நடத்தினர்.

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.செந்தில்குமார் தலைமையில் கேளம்பாக்கத்தில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அனிவித்து நிகழ்ச்சியை துவங்கிய காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிளுக்கு மாலை அனிவித்தும், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அனிவித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

பின்னர் சுமார் 50 பேர் கலந்து கொண்டு பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு கேளம்பாக்கத்தில் சைக்கிள் பேரணி சென்றனர்..

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி