திருப்போரூர்: மின் கசிவால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரண உதவி வழங்கல்

திருப்போரூர்: மின் கசிவால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரண உதவி வழங்கல்
X

பாதிக்கப்பட்ட மக்களுக்கு, திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் எல்.இதயவர்மன், நிவாரண உதவிகளை வழங்கினார். 

திருப்போரூர் அருகே மின் கசிவால் சேதமடைந்த வீடுகளுக்கு, திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்மன் நிவாரண உதவிகளை வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே மின் கசிவு காரணமாக குடிசை வீடு முற்றிலும் எரிந்த்து. இதனை அறிந்த திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் எல்.இதயவர்மன், திருப்போரூர் பேரூர் கழக செயலாளர் திரு.எம்.தேவராஜ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆறுதல் கூறி, அவர்களுக்கு வீடு கட்டுவதற்கு நிதி உதவி செய்தும் , அரிசி , மளிகை பொருட்கள் மற்றும் துணிகள் வழங்கினர்.

உடன், மாம்பாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர் த.அருண்குமார், திருப்போரூர் பேரூர் கழக நிர்வாகிகள் எஸ்.அஸ்கர்அலி மாவட்ட பிரிதிநிதி, சந்திரன், மாவட்ட பிரிதிநிதி, வார்டு உறுப்பினர் குமரன், பேரூர் துணை செயலாளர் ரவி, வார்டு செயலாளர், சங்கப்பன், பேரூர் கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ், கன்னகப்பட்டு ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு