பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இ.கயூனிஸ்ட் கட்சி சைக்கிள் பேரணி

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இ.கயூனிஸ்ட் கட்சி சைக்கிள் பேரணி
X

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வை கண்டித்து மானாம்பதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சைக்கிள் பேரணி நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட மானாம்பதியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திய ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடந்தது.

மானாம்பதி பேருந்து நிலையதிலிருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணி ஆமையாம்பட்டு, ஆனந்தபுரம், குண்ணபட்டு, வழியாக பஞ்சந்திருத்தி சுதந்திர போராட்ட தியாகி பகத்சிங் சிலை அருகே முடிவடைந்தது. முன்னதாக மனாம்பதி பேருந்து நிலையம் அருகில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சைக்கிளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அவர்கள் ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பிறகு திருப்போரூர் தொகுதி துணைச் செயலாளர் முனுசாமி தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர் ஆதிமூலம் அழகேசன் கணபதி மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் செயலாளர் பார்த்திபன் கட்சி நிர்வாகிகள் தேவராஜ் கார்த்தி அரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!