திருப்போரூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

திருப்போரூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
X

திருப்போரூர் உதவி காவல் ஆய்வளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.

திருப்போரூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற மணிக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.

செங்கல்பட்டு அடுத்த வாலாஜாபாத் பகுதியில் 1963 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி பிறந்தவர் மணி பட்டப்படிப்பு பயின்ற இவர் 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி சித்தாமூர் காவல் நிலையத்தில் காவலராக பணியில் சேர்ந்தார் கடந்த 37 ஆண்டுகளாக அனைத்து கட்சிப் பிரமுகர்கள் அரசு உயர் அதிகாரிகள், பொது மக்கள் என அனைவரிடமும் நன்மதிப்பைப் பெற்று தற்போது திருப்போரூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

அவரது விருப்ப ஓய்வு மனுவினை அரசு பரிசீலித்து கடந்த மாதம் 31ஆம் தேதி விருப்ப பணிஓய்வு வழங்கியது அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவில் காவல் துறையினர் சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் அவர்களது குடும்பத்தினர் என பலர் கலந்துகொண்டு சால்வை மற்றும் மாலை அணிவித்து பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது