திருப்போரூர் ஒன்றியம் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்தார் கலெக்டர்

திருப்போரூர் ஒன்றியம்  வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்தார் கலெக்டர்
X

திருப்போரூர் ஒன்றியத்தில் அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராகுல்நாத் ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதனையொட்டி இன்று திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கேளம்பாக்கம் படூரில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஞ்சு. வட்டார ஊராட்சி அலுவலர் வெங்கட்ராமன் கிராம ஊராட்சி உதவியாளர்கள் வசந்த, ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai as the future